பிரபல தொலைக்காட்சி நடிகர் நித்தேஷ் பாண்டே மரணம்.!! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சி நடிகர் நித்தேஷ் பாண்டே மரணம்.!!

பிரபல தொலைக்காட்சி நடிகாராக இருப்பவர் நித்தேஷ் பாண்டே. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான, 'மஞ்சிலின் அபானி அபானி', 'அஸ்தித்வா... ஏக் பிரேம் கஹானி', 'சாயா', 'ஜஸ்தாஜூ' மற்றும் 'துர்கேஷ் நந்தினி' போன்றவற்றில் நடித்து உள்ளார். 

'ஓம் சாந்தி ஓம்', 'கோஸ்லா கா கோஸ்லா', 'பதாய் தோ', 'ஷாதி கே சைட் எபெக்ட்ஸ்' மற்றும் 'ரங்கூன்' உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார். 'ஆஸ்தா' மற்றும் 'மிசல் பாவ்' போன்ற நாடக நிகழ்ச்சிகளிலும் நித்தேஷ் பணியாற்றி உள்ளார். 

இந்த நிலையில் நித்தேஷ் பாண்டே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகர் இகத்பூரி பகுதியில் ஓட்டல் ஒன்றில் மர்மமுறையில் உயிரிழந்தபடி கிடந்து உள்ளார். 

இதைப்பார்த்த ஓட்டல் ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், ஓட்டல் பணியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, நித்தேஷ் பாண்டே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்க கூடும். பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல தொலைக்காட்சி நடிகர் உயிரிழந்த சம்பவம் தொலைக்காட்சி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor nitesh pandey died in maharastra hotel


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->