மீண்டும் தந்தையானார் விக்ரம் பட நடிகர்.! வைரலாகும் புகைப்படம்.!  
                                    
                                    
                                   actor narain father of 2nd time 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழில் நெஞ்சிருக்கும் வரை, சித்திரம் பேசுதடி, பள்ளிக்கூடம் மற்றும் அஞ்சாதே போன்ற படங்களில் நடித்தவர்தான் நடிகர் நரேன். இவர் லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
மலையாள திரைப்படங்கள் பலவற்றில் நரேன் நடித்திருக்கிறார். சென்ற 2007 ஆம் வருடத்தில் மஞ்சு என்ற பெண்ணை மணமுடித்தார். இவர்களுக்கு ஏற்கனவே தன்மையா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. அந்த குழந்தைக்கு 14 வயதாகும் நிலையில் மீண்டும் தந்தையாகியுள்ளார். 
 தன்னுடைய திருமண நாளின் போது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ட்விட்டர் மூலம் அவர் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
இது குறித்த தகவலையும் நரேன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். தனது மகனின் கைவிரல்களை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருக்கின்றார். இதை கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       actor narain father of 2nd time