இந்த பக்கம் உதயநிதி.. அந்தப் பக்கம் தயாநிதி.. பிரதர்ஸ் டே வாழ்த்தை வெளியிட்ட நடிகர் அருள்நிதி.! - Seithipunal
Seithipunal


திமுக வாரிசுகளான தயாநிதி அழகிரி, அருள்நிதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் மூன்று பேரும் சினிமாவில் பங்காற்றி வருகின்றனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் உதயநிதி படங்களை தயாரிப்பதுடன் நிறைய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.

இவரைத் தொடர்ந்து அருள்நிதியும் படங்களில் நடித்து வரும் நிலையில் தயாநிதி ஓரிரு படங்களை தயாரித்து வருகின்றார். சென்னையில் நடைபெற்று வரும் அனைத்து பிரீமியர் லீக் போட்டிகளையும் உதயநிதி தொடர்ந்து பார்த்து வருகின்றார்.

சமீபத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதிய ப்ளே ஆப் சுற்றி போட்டியை உதயநிதி கண்டுகளித்தார். இதில் சென்னை அணி போட்டியில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.  

இந்த போட்டியை காண உதயநிதி ஸ்டேடியத்தில் இருந்த போது அவருடன் நடிகர் அருள்நிதி மற்றும் தயாநிதி இருவரும் இருந்தனர். மூன்று பேரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அருள்நிதி ஹாப்பி பிரதர்ஸ் டே என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor arulnithi brothers day post


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->