மதுமிதாவின் அதிரடி முடிவிற்கு இது தான் காரணமாம்.! வெளிவந்த அபிராமி பகீர் தகவல்.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷன் மூலமாக வெளிவந்த அபிராமி, மதுமிதாவின் தற்கொலை முயற்சி குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தற்போது பதில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே வரவேற்பை பெற்று வந்த அபிராமி கடந்த வாரத்தில் நடைபெற்ற முகேன் உடனான பிரச்சினையினால் மக்களிடம் வெறுப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் சென்ற வாரத்தில் சிறப்பு விருந்தினராக வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

 madhumitha, vanitha, losliya, seithipunal

அதன்பின்னர் பல்வேறு பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் தலை வெடிக்கும் அளவிற்கு உருவாகியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மதுமிதா கடந்த வாரத்தில் தற்கொலை முயற்சி செய்ததாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் இணையதளத்தில் ஆண்கள்தான் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அபிராமியிடம், "மதுமிதா உங்களை சிறையில் போட்டதற்காக தான் அங்கிருந்த ஆண்களிடம் சண்டையிட்டார். ஆனால், நீங்கள் ஏன் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை.? அவர் உங்களுக்காகத் தானே பேசினார்.? என கேள்வி எழுப்பினார். 

madhumitha, seithipunal

அதற்கு அபிராமி,  "மது ஒரு குழந்தை போன்றவர். அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டார். உண்மை என்னவென்று தெரியாமல் கேள்வி எழுப்பாதீர்கள். மேலும், சேரன் மற்றும் கஸ்தூரியுடன் அவரை கண்பெஷன் ரூமுக்கு அனுப்பி வைத்ததே நான்தான். அனைத்தையும் இங்கே கூற இயலாது. இது மிகவும் சர்ச்சையான விஷயமாகும். இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம். மதுவை நான் எந்த விதத்திலும் காயப்படுத்தவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அபிராமி கூறி இருப்பதை உற்று கவனித்தால் நமக்கு தெரியும், ஏதோ சரியான விஷயம் பிக் பாஸ் வீட்டில் நடந்து இருக்கின்றது அதனை மொத்தமாக மூடி மறைக்கின்றனர் என்பது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abirami open talk about madhumitha suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->