அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் விவாகரத்தா? முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் பச்சன்! - Seithipunal
Seithipunal


இந்திய  சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஜீன்ஸ், எந்திரன், ராவணன், கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

இவரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்  ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். திடீரென இவர்கள் உறவுக்குள் விரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு ஐஸ்வர்யா ராய்  மற்றும் விவேக் ஓபராய்  இடையே காதல் வளர்ந்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் கடந்த 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை  திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. இந்த தம்பதிக்கு  ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

சமீப காலமே ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே சுமுகமான உறவு இல்லை என்ற கிசுகிசு பாலிவுட் வட்டாரங்களில் பரவி வந்தது. அந்த கிசுகிசுக்களில் உண்மை இருக்கும் என்பது போலவே பொது நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். அதன் காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யலாம் என்ற வதந்தியும் பாலிவுட்டில் பரவி வந்தது.

தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராதனாவுடன்  ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றார். இணையதளத்தில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் மை ஃபேவரிட் பீப்பிள் என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த அபிஷேக் பச்சனும் மைன் டூ என கமெண்ட் செய்துள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abhishek bachan puts an fullstop to the rumours about divorce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->