டிக்கெட் முன்பதிவில் கோடிக்கணக்கில் வசூலித்த ''ஆடு ஜீவிதம்''.! - Seithipunal
Seithipunal


பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கத்தில் பிரித்திவிராஜ் - அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஆடு ஜீவிதம்'' (தி கோட் லைஃப்). 

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பட குழுவினர் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே கேரள மாநிலத்தில் முதல் நாள் படத்தை காண ரசிகர்கள் அதிவேகமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். 

இதன் மூலம் சுமார் 2 கோடிக்கும் மேல் இந்த திரைப்படம் வசூலித்துள்ளது என பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த  திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளதால் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadu Jeevitham movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->