ரசிகரை அடித்து கொன்ற கொடூர கொலை வழக்கு!...நடிகர் தர்சனனுக்கு, இடைக்கால ஜாமீன்! - Seithipunal
Seithipunal


ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்சனனுக்கு, இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகராக இருந்த ரேணுகாசாமி என்பவர், கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர். இவரை நடப்பு ஆண்டு ஜூன் 8ம் தேதி 4 பேர் கும்பல் நடிகர் தர்ஷனை பார்க்க அழைத்துச் செல்வதாக கூறி காரில் கடத்திச் சென்று பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் அருகே பட்டணகெரேயில் ஒரு கார் ஷெட்டில் அடைத்து வைத்து அடித்தே கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் அவரது உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் வீசி சென்றுள்ளனர். இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உட்பட மேலும் 19 பேரை அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் பெல்லாரி சிறையில் இருந்த தர்சன், ஜாமின் வழங்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A brutal murder case in which a fan was beaten to death actor darshan granted interim bail


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->