பிரான்ஸ்: 75வது கேன்ஸ்  சர்வதேச திரைப்பட விழா.. இன்று முதல் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு பிரான்ஸில் 75 வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்படுவதும் சர்வதேச திரை கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. 

உலகம் முழுவதும் உள்ள திரைக்கலைஞர்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் மே 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் தமன்னா, நயன்தாரா பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த விழாவில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ராக்கெட்ரி திரைப்படம் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75th Cannes Film festival today starts


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->