திரையுலகமே அதிர்ச்சி.. 55 பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட 55 பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட 55 பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அந்த வகையில், பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான விருந்தில் பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான், கத்ரீனா கைப், கியாரா அத்வானி, ஜான்வி கபூர், மலைகா அரோரா மற்றும் கரீனா கபூர் கான் போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில், கரண் ஜோஹரின் பிரமாண்ட விருந்தில் விருந்தினர்களாக கலந்து கொண்ட 50 முதல் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

55 Bollywood actors affected covid positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->