வில்லன் நடிகருக்கு பிறந்த ஆண் குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் ஆர்கே சுரேஷ் பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. 

எனவே அடுத்தடுத்து ஆர் கே சுரேஷ் நிறைய இயக்குனர்கள் வில்லனாக கமிட் செய்ய ஆரம்பித்தார்கள். தொடர்ந்து அவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2020இல் அவர் மது லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

ஏற்கனவே கடந்த 2021 இல் ஆர் கே சுரேஷ்க்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகைய சூழலில், அவருக்கு மேலும், ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இது பற்றிய தகவலை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். 

அத்துடன் புதிதாக பிறந்திருக்கும் அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் இருப்பதாகவும், கடவுள் அருளால் அது தற்போது குணமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆர் கே சுரேஷுக்கு ஆண் குழந்தை பிறந்ததற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2Nd Baby For Rk suresh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->