கமல், ரஜினியுடன் 80-ல் ஜோடி போட்ட நடிகையா இது.?! வைரலாகும் சமீபத்திய புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


80களில் தமிழ் சினிமாவில்  முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மாதவி. இவர் அப்போது பிரபல நடிகர்களாக இருந்த ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன்  அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக இணைந்து பணியாற்றி  இருக்கிறார்.

புதிய தோரணங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தில்லுமுல்லு,  தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை,  கர்ஜனை ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவர் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து டிக் டிக் டிக், காக்கிச்சட்டை  எல்லாம் இன்பமயம், சட்டம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஏக் துஜே கேலியே திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி தெலுங்கு சினிமாவிலும் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த அக்னி பாத் என்ற இந்தி திரைப்படத்தில்  அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 1996 ஆம் ஆண்டில்  பிப்ரவரி 14-ஆம் தேதி ரால்ஃப் சர்மா என்ற மருந்து துறையின் தொழிலதிபரை  திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவர். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது குடும்பத்தின் அழகிய புகைப்படங்களை ரசிகர்களுடன் அவர் பகிர்ந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1980s fame actress family pctures storms internet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->