இந்தியாவில் ரூ.6 வரை உயரப் போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 127 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.40-க்கு, டீசல் விலை ரூ. 91.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டின் மீது பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

தற்போது கச்சா எண்ணெய் பீப்பாய் 139 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரு நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்றும், ஐந்து மாநில தேர்தல் பிறகு இந்த உயர்வு இருக்கலாம் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பெட்ரோல், டீசல் விலையை 5 முதல் 6 ரூபாய் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, இன்று பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக உயர்த்தாமல், 50 காசுகள் என்ற அளவில் படிப்படியாக உயர்த்தலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol and diesel price may be hike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->