ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி., ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ங்கி கணித்துள்ளது.

ஜிஎஸ்டி (Goods and Services Tax) சரக்கு மற்றும் சேவை வரி என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மறைமுக வரி ஆகும். இது கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல மறைமுக வரிகளை மாற்றியுள்ளது. 

ஜி.எஸ்.டி வரியின் வளர்ச்சி விகிதம் 9.5% என்று ரிசர்வ் வ

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி, கல்வித் தீர்வை, வாட் என்பன உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்படுகின்றன. 

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு நடைமுறையில் இருந்த நிலையில், இதையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரு வரி என்று கொண்டுவரப்பட்டதுதான் 'சரக்கு மற்றும் சேவை வரி' எனப்படும் ஜிஎஸ்டி ஆகும்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி வரியின் வளர்ச்சி விகிதம் 9.5% என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் மேலும் தெரிவிக்கையில், "2022 ஆம் நிதியாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 9.5% ஆகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் நிதியாண்டின் பணவீக்க விகிதம் 5.3% ஆக இருக்கும்.

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 8 வது முறையாக மாற்றமின்றி 4% ஆக தொடர்கிறது என்பது குறிப்பிட தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shaktikanta Das say about gst


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->