“பிராக்டிகல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்” – ரிவர் இன்டீ ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை! தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வாங்கலாம்?
Practical Electric Scooter Features and Price of River Inti Scooter Where can I buy it in Tamil Nadu
பெங்களூருவைச் சேர்ந்த ரிவர் நிறுவனத்தின் ‘இன்டீ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், தினசரி பயன்பாட்டிற்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் பிராக்டிகல் அம்சங்களால் வாடிக்கையாளர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது. குறைந்த பராமரிப்பு செலவு, அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மற்றும் வலுவான ரேஞ்ச் ஆகியவற்றால் இது இன்று சந்தையில் தனித்துவமான மாடலாக திகழ்கிறது. யமஹா நிறுவனமும் ரிவரில் முதலீடு செய்திருப்பது இந்த ஸ்கூட்டரின் மேல் நம்பிக்கையை மேலும் உயர்த்துகிறது.
ரேஞ்ச் மற்றும் பேட்டரி திறன்:
4 kWh பேட்டரியுடன் வரும் இன்டீ, சான்றளிக்கப்பட்ட 120 கிமீ ரேஞ்சைக் கொண்டுள்ளது. தினசரிப் பயணத்தில் 90 கிமீ வரை எளிதாக செல்ல முடியும் என்று பயனர்கள் கூறுகின்றனர்.
பவர் மற்றும் வேகம்:
6.7 kW மோட்டார் (8.9 hp) மற்றும் 26 Nm டார்க்குடன் வரும் இந்த ஸ்கூட்டர், மணிக்கு 90 கிமீ அதிகபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
மூன்று ரைடிங் மோடுகள்—எக்கோ, ரைடு, ரஷ்—அனைத்தும் பயண சூழலுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
அசத்தும் அண்டர்சீட் ஸ்டோரேஜ்:
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அரிதாக கிடைக்கக்கூடிய 43 லிட்டர் பெரும் ஸ்டோரேஜ் மாண்ட்டர் இண்டீயின் முக்கிய பலம்.
ஒரு ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் + சிறிய டஃப்பிள் பேக் ஆகியவற்றையும் வைக்க முடியும்.
முன்புறத்தில் கூட சிறிய பொருட்களுக்கு தனி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.
பெரிய 14-இன்ச் வீல்கள்:
ஸ்கூட்டர் பிரிவில் அரிதாக கிடைக்கும் 14-இன்ச் பெரிய வீல்கள், மேடு–பள்ளமான சாலைகளிலும் நிலைத்த பயண அனுபவத்தை தருகின்றன.
வளைவுகளிலும் அதிக நம்பகத்தன்மை கிடைக்க உதவுகின்றன.
விலை மற்றும் நிறங்கள்:
இன்டீ ஸ்கூட்டர் விலை — ₹1.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
கிடைக்கும் நிறங்கள் — ரெட், யெல்லோ, ப்ளூ, கிரே, ஒயிட்.
தமிழகத்தில் எங்கெல்லாம் வாங்கலாம்?
ரிவர் நிறுவனம் இந்தியா முழுவதும் 50 ஷோரூம்கள் நடத்துகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 8 ஷோரூம்கள் உள்ளன:
தினசரி நகரப் பயணத்திற்கே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இன்டீ, வாடிக்கையாளர்களுக்கான பிராக்டிகல் மற்றும் பொருத்தமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக திகழ்கிறது.
English Summary
Practical Electric Scooter Features and Price of River Inti Scooter Where can I buy it in Tamil Nadu