உயர்கிறதா பெட்ரோல் டீசல் விலை., மத்திய வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை  தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கூடுதல் வரி, லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டது. செஸ் எனப்படும் மேல் வரியை  9 ரூபாய் வரை அதிகரிக்க  வாய்ப்பிருப்பதாக, மத்திய வருவாய்த்துறை செயலாளர் சூசகமாக தெரிவித்திருப்பதால், வாகன எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் உள்ள சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, பெட்ரோல், டீசல் மீதான மேல் வரி லிட்டருக்கு தலா ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்டு  மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூசன் தெரிவிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான, மேல் வரியை, எப்போது வேண்டுமானலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, மறைமுகமாக தெரிவித்தார். பட்ஜெட் அறிவிப்பின் படி, பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் வரி லிட்டருக்கு 8 ரூபாய் வரையிலும், டீசலுக்கு 2 ரூபாய் வரையிலும் உயரக்கூடும் என தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான மேல் வரிவிதிப்பின் எதிரொலியால், லிட்டருக்கு, தலா 9 ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், அஜய் பூசன் பாண்டே தெரிவித்திருக்கிறார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol and diesel price may be hike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->