ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை வெறும் ரூ.39,999 மட்டுமே..பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம்! ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விவரம்!
Ola Electric priced at just Rs 39999 Introducing with various features Worth it Worth it or not Full details
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு பெரிய அதிரடி முடிவை எடுத்துள்ளது.பெங்களூரை மையமாகக் கொண்ட ஓலா எலக்ட்ரிக், டெலிவரி பணி செய்பவர்களும் நகர்ப்புற பயணிகளும் எளிதில் வாங்கக்கூடிய வகையில், ரூ. 39,999 முதல் தொடங்கும் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வரிசை நான்கு மாடல்களாக வெளிவந்துள்ளது — Ola Gig, Gig+, S1 Z, மற்றும் S1 Z+ எனப் பெயரிடப்பட்டுள்ளன.
விலை ரூ.39,999 முதல் ரூ.64,999 வரை மாறுபடுகிறது.
இதில், Ola Gig மாடல் முக்கியமாக டெலிவரி பணி செய்பவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.இது 112 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் திறனுடையது. உச்ச வேகம் 25 கி.மீ/மணி, மேலும் 1.5 kWh திறன் கொண்ட அகற்றக்கூடிய பேட்டரி வசதியும் இதில் உள்ளது.
அதன் மேம்பட்ட பதிப்பான Gig+, ரூ.49,999 விலையில் கிடைக்கிறது.இது 157 கி.மீ வரை ஓட்டச்சம்தமும், 45 கி.மீ/மணி வேகத்துடனும் வருகிறது — நீண்ட தூரப் பயணிகளுக்குப் பொருத்தமானது.
அடுத்ததாக, நகர்ப்புற பயணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள Ola S1 Z மாடல், ரூ.59,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.
இதில் 146 கி.மீ வரை ரேஞ்ச், 70 கி.மீ/மணி வேகம் மற்றும் வேகமான துவக்கத்துடன், இளம் தொழிலாளர்கள், மாணவர்கள், மூத்த நபர்கள் அனைவருக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைவிட மேம்பட்ட S1 Z+ மாடல் ரூ.64,999 விலையில் கிடைக்கிறது.இது தனிப்பட்ட பயணத்திற்கும், வணிகப் பயன்பாட்டிற்கும் ஏற்றது. அதிக சக்தி மற்றும் பாரம் தாங்கும் திறனைக் கொண்டது என்பதால் டெலிவரி துறையிலும் சிறப்பாக பயன்படும்.
இதனுடன் ஓலா நிறுவனம் ஒரு புதிய கண்டுபிடிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது — அதாவது PowerPod எனப்படும் இன்பெர்ட்டர் சாதனம்.
இதன் விலை ரூ.9,999. இதன் சிறப்பம்சம் என்னவெனில், ஸ்கூட்டரில் உள்ள அகற்றக்கூடிய பேட்டரியைப் பயன்படுத்தி, வீட்டில் உள்ள மின்சாதனங்களை — ஒளி, விசிறி, டிவி போன்றவற்றை — மூன்று மணிநேரம் வரை இயக்கலாம்.
மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
இதன்மூலம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது அனைத்து விலைப் பிரிவுகளுக்கும் பொருத்தமான வாகன வரிசையை வழங்குகிறது.
உயர் தர வரிசையில் S1 Pro (₹1,34,999) மற்றும் S1 Air (₹1,07,499) ஆகியவை உள்ளன.
பொதுமக்களுக்கான S1 X சீரிஸ் ரூ.74,999 முதல் ரூ.1,01,999 வரை கிடைக்கிறது.
மேலும், நிறுவனம் Roadster என்ற மோட்டார் சைக்கிள் வரிசையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.74,999 முதல் ரூ.1,99,999 வரை உள்ளது.இதில் 2.5 kWh முதல் 16 kWh வரை பேட்டரி திறன் கொண்ட பல மாடல்கள் இடம் பெற்றுள்ளன.
மொத்தத்தில், இந்திய மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு மிகப் பெரிய அதிரடியை நிகழ்த்தியுள்ளது.பயனர்கள் தங்கள் அருகிலுள்ள ஓலா டீலரிடம் விலை மற்றும் கிடைப்புத் தகவல்களை உறுதி செய்து கொள்ளலாம்.
English Summary
Ola Electric priced at just Rs 39999 Introducing with various features Worth it Worth it or not Full details