நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவு.! - Seithipunal
Seithipunal


இந்த நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 விழுக்காடாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில்  நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஐஎம்எஃப் வெளியிட்டது. அந்த மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட குறைவானதாகும், இதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த நடப்பு நிதியாண்டில் 4.8 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India's economic growth rate slowed in the current fiscal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->