அமெரிக்காவை எதிர்க்க சீனாவை நண்பனாக்கிய இந்தியா..! உலகமே உற்று நோக்கும் சந்திப்பு..!அமெரிக்காவுக்கு எச்சரிக்கை சிக்னலா?
India befriends China to oppose America A meeting that the whole world is watching closely Is it a warning signal to America
‘‘நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்’’ – சீன கம்யூனிஸ்ட் தலைவர் மா சே துங்கின் புகழ்பெற்ற இந்த வாசகம் தற்போதைய உலக அரசியல் சூழலிலும் பொருந்தும் வகையில் உள்ளது. அமெரிக்காவுடன் உறவுகள் சீராக இல்லாத சூழலில், சீனாவுடன் இந்தியா உரையாடலைத் தொடங்கியுள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியா–சீனா உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இரு நாடுகளும் உரையாடல் மூலம் புதிய தொடக்கத்தை நோக்கி முன்னேறுகின்றன. ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது சீன இணை அமைச்சர் வாங் யீயுடன் இருதரப்பு உரையாடலில் ஈடுபட்டார்.
அந்த உரையாடலில், ஜெய்சங்கர், “இந்தியா–சீனா உறவுகளில் எந்த முன்னேற்றத்திற்கும் அடிப்படை, எல்லைப்பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கமே. இதற்கான பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன், பரஸ்பர ஆர்வம் ஆகிய மூன்று கொள்கைகளை இரு நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும். வேறுபாடுகள் மோதலாக மாறக்கூடாது” என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, “இரு நாடுகளும் எல்லைப்பகுதிகளில் அமைதியைப் பேணுகின்றன. வெளிப்புற குறுக்கீடுகளை சமாளித்து, பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்த நம்பிக்கை கொண்டுள்ளோம். சீன–இந்திய உறவுகளில் வளர்ச்சியின் வேகத்தை வலுப்படுத்தி, ஒருவரின் முன்னேற்றம் மற்றவரின் வெற்றியாக அமைய வேண்டும். இதன் மூலம் ஆசியா மற்றும் உலகிற்கும் தேவையான உறுதியை அளிக்க முடியும்” என்றார்.
இந்த சந்திப்பின் பின்புலத்தில், பிரதமர் மோடி சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதில் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
தற்போது, அமெரிக்கா இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் கொள்கையில் அதிருப்தியடைந்து, 50% வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே நேரத்தில், சீனாவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரிப்பது, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளாகிய இந்தியாவும், சீனாவும், பொருளாதார வளர்ச்சியில் உலகின் முக்கிய வல்லரசுகளாக விளங்குகின்றன. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம்; அதேசமயம், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
வரி பிரச்சினையில் சீனா, இந்தியாவின் நிலைப்பாட்டைத் தொடக்கம் முதலே ஆதரித்து வருகிறது. எல்லை பிரச்சினையை ஒதுக்கி வைத்து, இரு நாடுகளும் முக்கியமான துறைகளில் கூட்டுறவை முன்னேற்றினால், அது அமெரிக்காவுக்கே நேரடியான சவாலாக அமையக்கூடும்.
English Summary
India befriends China to oppose America A meeting that the whole world is watching closely Is it a warning signal to America