பெண்களை நற்செய்தி! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு மிகவும் பிடித்தமான தங்கத்தை வாங்கி போடுவதில் ஆர்வம் அதிகம்.அதன்படி தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.இது பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அவ்வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது.

இதைத்தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையானது.இந்நிலையில், 2 -வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.105 குறைந்து ஒரு கிராம் ரூ.9,200-க்கும் சவரனுக்கு ரூ. 840 குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கு விற்பனையாகிறது.மேலும், 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120 க்கும் பார் வெள்ளி ரூ. 1,20,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை:-
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
கடைசி 5 நாள் வெள்ளி விலை :-
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
13-06-2025- ஒரு கிராம் ரூ.120
12-06-2025- ஒரு கிராம் ரூ.119
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for women Do you know what gold price is today


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->