ஜெர்மன் போர்ஷே புதிய 911 GT3 RS கார் அறிமுகம்.! மணிக்கு 296 கிலோமீட்டர் வேகம்.! - Seithipunal
Seithipunal



ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே நிறுவனம் அதன் புதிய 911 GT3 RS மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

புதிய போர்ஷே கார் விலை - ரூ.3 கோடியே 25 லட்சம்‌  எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இதுவரை உருவாக்கப்பட்ட 911 மாடல்களில் அதிக திறன் மற்றும் டிராக் கொண்ட அம்சங்களுடன் GT3 RS மாடல்   உருவாக்கப்பட்டுள்ளது. 

• இந்த புதிய மாடலில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் மற்றும் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 

• மேலும், ரிஷேப் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஸ்பிட்டர் மற்றும் பொனெட்டில் பெரிய வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் வீல் ஆர்ச்கள் மற்றும் கதவுகளின் பின் ஏர் இன்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

• காரின் ஸ்பாயிலர் செட்டிங்களை மாற்ற ஸ்டீரிங் வீல் மீது DRS ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த புதிய போர்ஷே 911 GT3 RS மாடலில் 4 லிட்டர் மற்றும் ஆறு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் 518 ஹெச்பி பவர் மற்றும் 465 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 

• மேலும், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் PDK ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். 

• இதனுடன் அதிகபட்சமாக மணிக்கு 296 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

German Porsche unveils new 911 GT3 RS car Speed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->