தீபத் திருநாள் எதிரொலி - அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதையொட்டி மாலை நேரத்தில், வீடுகளில் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். 

அதுமட்டுமல்லாமல், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

அதன் படி, மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.1,800க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று ரூ.2,200 ஆகவும், நேற்று ரூ.50-க்கு விற்பனையான செவ்வந்திப்பூ இன்று ரூ.150 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதேபோன்று தோவாளை மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,250-க்கும், மல்லிகை ரூ.1800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

flower rate increased for karthikai deepam festival


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->