மலிவான சீனா தயாரிப்புகள்...பலியான 2,800 ஊழியர்கள்...! - தனியார் நிறுவனங்கள் எடுத்த விபரீத முடிவு - Seithipunal
Seithipunal


சமூக வலைதளமான ‘ரெடிட்’ தளத்தில், ஒரு நிறுவனத்தின் மூத்த அதிகாரி பகிர்ந்த பதிவு தொழில்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், “கடந்த 34 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனத்திற்கு மை உற்பத்திக்கான 3 ஆலைகள் இயங்கி வருகின்றன.

ஆனால், சமீப காலமாக இந்திய சந்தையில் சீனாவிலிருந்து மிகக் குறைந்த விலையில் மை இறக்குமதி அதிகரித்து வருகிறது. அந்த விலையுடன் போட்டியிட எங்களுக்கு இயலாமல், கடந்த 3 ஆண்டுகளாக நிறுவனம் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் தவிர்க்க முடியாத சூழலில், 3 ஆலைகளில் 2 ஆலைகளை மூடும் கடினமான முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது.

இந்த தீர்மானத்தின் விளைவாக, 1,934 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 896 ஒப்பந்த தொழிலாளர்கள் என மொத்தம் 2,800-க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.

மேலும், 72 பேர் கொண்ட தகவல் தொழில்நுட்பக் குழுவும் வெறும் 8 பேராகக் குறைக்கப்பட்டுள்ளது.பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்தும் எனக்கு மனவேதனை உள்ளது. ஊழியர்களுக்கு குறைந்தது 3 முதல் 5 மாத ஊதியம் அளிக்க வேண்டும் என நான் பரிந்துரைத்தேன்.

ஆனால் நிர்வாகம் மிகவும் குறைந்த அளவிலான இழப்பீட்டை, அதாவது 2 வார ஊதியம் மற்றும் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்ட சிறிய தொகையை மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது” என அவர் தெரிவிக்கப்படுகின்றது.

நிறுவனத்தின் இந்த முடிவால் கடும் அதிருப்தி அடைந்த அந்த அதிகாரி, தமது பதவியிலிருந்து விலகி ஜெர்மனிக்குச் செல்லத் தீர்மானித்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cheap Chinese products 2800 employees lost their lives tragic decision taken by private companies


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->