பஜாஜ் பல்சர் 125 அப்டேட்: மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 'பல்சர் 125' பைக் மாடலை வெளியிட்டுள்ளது பஜாஜ்! விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பஜாஜ் நிறுவனம் தனது பிரபலமான பல்சர் வரிசையில், பல்சர் 150க்கு பிறகு தற்போது பல்சர் 125 பைக்கையும் அப்டேட் செய்துள்ளது. மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாமல், புதிய வசதிகள் மற்றும் காஸ்மெடிக் மேம்பாடுகளுடன் இந்த அப்டேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பல்சர் 125 பைக்கில் LED முகப்பு விளக்குகள் மற்றும் LED டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே அம்சங்கள் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட பல்சர் 150 மாடலில் அறிமுகமாகிய நிலையில், தற்போது அவை பல்சர் 125-க்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் பைக் முன்பை விட அதிக மாடர்ன் தோற்றத்தைப் பெற்றுள்ளது.

காஸ்மெடிக் மாற்றங்களாக எரிபொருள் டேங்க், சைடு பேனல்கள் மற்றும் இன்ஜின் கவுல் பகுதிகளில் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன், புதிய நிறங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், பல்சர் 125 முந்தைய மாடலை விட புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பிளாக் கிரே, பிளாக் ரேஸிங் ரெட், பிளாக் சியான் ப்ளூ மற்றும் ரேஸிங் ரெட் வித் டேன் பெய்ஜ் என நான்கு நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது.

இன்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே 124.4 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் தொடர்கிறது. இந்த இன்ஜின் 11.8 ஹெச்.பி பவரும், 10.8 என்.எம் டார்க்கும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், தினசரி பயணத்திற்கு ஏற்ற செயல்திறனை வழங்குகிறது.

சஸ்பென்ஷன் அமைப்பில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலும் 17 இன்ச் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

பொதுவாக அப்டேட் செய்யப்பட்ட மாடல்களுக்கு விலை உயர்வது வழக்கம். ஆனால், பஜாஜ் இந்த அப்டேட் பல்சர் 125 மாடலை முன்பை விட குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. கார்பன் சிங்கிள் சீட் வேரியன்ட் ரூ.89,910 எக்ஸ்-ஷோரூம் விலையிலும், கார்பன் ஸ்பிளிட் சீட் வேரியன்ட் ரூ.92,046 எக்ஸ்-ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

இந்த அப்டேட்கள் பல்சர் 125 மாடலுக்கு மட்டுமே பொருந்தும்; பல்சர் 125 நியான் மாடலுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் பல்சர் வரிசையில் தொடக்கநிலை மாடலாக விற்பனை செய்யப்படும் பல்சர் 125, இந்த புதிய அப்டேட்டுடன் இளைஞர்கள் மற்றும் தினசரி பயணிகளை மேலும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bajaj Pulsar 125 Update Bajaj has launched the Pulsar 125 bike model with improved features Do you know the price


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->