சிலிண்டர் விலை கிடு கிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 3 உயர்ந்து, ரூ.1,018க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 8 உயர்ந்து ரூ. 2,507க்கு விற்பனை செய்யப்படுகிறது.

19 கிலோ எடையுள்ள வணிகப்பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை கடந்த மாதம் 2,499 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ரூ.8 உயர்ந்து, ரூ.  2,507 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 May LPG Cylinder Price in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->