சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்தனர். 

சமீப நாட்களாகவே சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் பெண்கள் தங்கத்தின் விலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை நிலவரத்தை காண்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ரூ. 41,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 5130 ரூபாய்க்கும், சவரன் ஒன்று ரூ. 41,040க்கு விற்பனை செய்யபடுகிறது.

அதேபோல் வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 1 2023 today gold silvar price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->