அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை 2வது நாளாக குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.4,710 ஆகவும், ஒரு சவரன், ரூ.37,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஒரு தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.4,695-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.37,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.58ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.58,000-க்கும் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

02.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->