தாம்பத்திய எண்ணத்தை தீர்க்க சுயஇன்பம்?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நிலையில் பெரும்பாலான இளம் வயதை கொண்டவர்கள் அதீத ஆர்வத்தால் தங்களின் வாழ்நாள் தேவையை ஒரு நிமிடத்தில் விரையம் செய்து வருகின்றனர் என்பதுதான் பெரும் சோகமாக உள்ளது. அவ்வாறு இருக்கும் இளைஞர்கள் சுய இன்பத்தை அனுபவிப்பதை தொடர்ந்து கையாண்டும்., சிலர் பொழுதுபோகவில்லை என்றாலும் கைப்பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விஷயத்தை சிலர் சுய இன்பம் என்பது சமாதான நடவடிக்கை என்று கூறினாலும்., அது அதிகரிக்கும் சமயத்தில் பல விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் இளம் வயதுள்ள நபர்கள் தங்களின் காம உணர்வை கட்டுக்குள் வைத்திருக்க அவசியம் தெரிந்திருப்பது அவசியம். இதுமட்டுமல்லாது இதனை கட்டுக்குள் வைப்பதால் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் பாதிப்பையும் தவிர்க்க முடிகிறது. 

harassment, affair,

எந்த சமயமும் முடிந்தளவு அடுத்தடுத்த வேலைகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வதன் மூலமாக கலவிக்கான எண்ணத்தில் இருந்து விலக்கம் கிடைக்கும். இளவயதில் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும். இந்த சமயத்தில் நமது மூளைக்கு தேவையான நல்ல பயனுள்ள தகவலை அளிப்பதன் மூலமாக நல்ல எண்ணங்கள் நமக்குள் ஏற்பட்டு நலம் பெறலாம். 

Tamil online news Today News in Tamil

எந்த சமயமும் இயன்றளவு தனிமையை தவிர்த்துவிடுவது நல்லது. செய்ய பணிகள் இல்லாத சமயத்தில்., மனதில் ஏதேனும் எண்ணங்கள் தோன்றும் சமயத்தில்., பிற செயல்பாடுகளை கவனிக்க துவங்க வேண்டும். நண்பர்கள் நம்முடன் அதிகளவில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் தவிர்க்கப்பட்டு., சுய இன்ப பழக்கவழக்கங்கள் வேரறுக்கப்படுகிறது. 

ground play, playing games in ground,

உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகளவு வழங்கும் விளையாட்டுகள் மற்றும் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளின் மீது அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். இது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் செலவீனத்திற்கும் வழிவகை செய்யும். உங்களுக்கு பிடித்த சுவாரஸ்ய விஷயத்தை வளர்த்துக்கொள்வதால்., பிற எண்ணங்கள் மறைக்கப்பட்டு., எந்த சமயத்திலும் சுவாரஸ்ய எண்ணங்கள் மனதில் இருக்கும். 

நமது இல்லங்களில் நாம் இருக்கும் சமயத்தில் பெற்றோருக்கு வீடுகளில் தேவையான உதவியை செய்தல்., பிற வேலைகளை செய்து கொண்டு இருந்தல்., திரைப்படங்கள் மற்றும் காமடி காணொளிகளை காணுதல்., நண்பர்களுடன் பேசி மகிழுதல்., உறவினர்களிடம் பேசுதல் போன்று செய்துகொண்டு இருந்தால்., காம எண்ணங்கள் நம்மில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக துவங்கும். நமது உடல் நலமும் பாதுகாக்கப்படும்..  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

self enjoy is wrong to life and future avoid this


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->