பெருவில் அரசுக்கு எதிரான போராட்டம்: உலகப் புகழ்பெற்ற மச்சு பிச்சு மூடப்பட்டது.! - Seithipunal
Seithipunal


பெருவில் கடந்த டிசம்பர் மாசம் ஆதிபர் பெட்ரோ காஸ்டிலோ மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக, துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார்.

இதைத்தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்க கோரியும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மச்சு பிச்சு மூடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மச்சு பிச்சு உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்  பார்வையிடும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக மச்சு பிச்சு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World famous Machu Picchu closed due to anti government protests in Peru


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->