இரக்கம் காட்டிய இஸ்ரேல்!! தாகத்தால் தவித்த காசாவுக்கு மீண்டும் குடிநீர் விநியோகம்!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 10 நாட்களாக தொடர்ந்து நீடித்து வரும் போர் காரணமாக இரு நாடுகளிலும் கடுமையாக உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்தும் வான்வழி தாக்குதலால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. 

குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு காசாவில் இருந்து நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் குறிப்பிட்ட பாதை வழியாக மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அனுமதி வழங்கியது.

அந்த சமயத்தில் எந்த தாக்குதலும் நடத்த மாட்டோம் எனவும் இஸ்ரேல் ராணுவம் உறுதி அளித்தது. அப்போது எகிப்து மற்றும் ஈரானில் இருந்து மருத்துவ உதவிகள் அனுப்பப்பட்டன. மேலும் அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ஆயுதம் தாங்கிய இரண்டு போர்க்கப்பல்கள் இஸ்ரேல் வந்தடைந்தது. 

அமெரிக்கா அனுப்பிய ஆயுத கப்பல்களால் இஸ்ரேல்-காஜா இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதால் காசாவுக்கு வழங்கிய எரிபொருள், மின்சாரம், தண்ணீர், இணையதளம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் முடக்கியது. 

இதன் காரணமாக எரிபொருள், குடிநீர், மருந்துகள் முற்றிலும் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டது. போரால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டால் அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் தான் காஜா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அமெரிக்கா இஸ்ரேலை அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் காசா பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய இஸ்ரேல் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் இரக்கம் காட்டியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel again supply drinking water to thirsty Gaza


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->