கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து - 11 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


மத்திய கொலம்பியாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய கொலம்பியாவின் குண்டினமார்கா மாகாணத்தில் உள்ள சுடடௌசா நகர் பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த பயங்கர விளைவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெடி விபத்தானது தொழிலாளி ஒருவரின் கருவியில் இருந்து தீப்பொறி பட்டு, அங்கு பரவியிருந்த வெடிக்கும் மீத்தேன் வாயுவால் வெடிப்பு ஏற்பட்டது என்றும், சுரங்கங்களில் இன்னும் 10 பேர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எரிசக்தி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஐரீன் வெலஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வெடிப்பு சுரங்கப்பாதைகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஐந்து சுரங்கங்களை பாதித்தது என்றும், இது ஒரு சங்கிலி வெடிப்பை உருவாக்கியது என்று குண்டினமார்கா மாகாண தீயணைப்புத் துறையின் கேப்டன் அல்வாரோ ஃபர்ஃபான் தெரிவித்துள்ளார். கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கங்களில் வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவது பொதுவானவை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Colombian coal mine blast kills 11


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->