பூடானில் கட்டுமானப் பணிகளை நடத்தும் சீனா.!! பரபரப்பை ஏற்படுத்தும் செயற்கை கோள் படங்கள்.!! - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் கடந்த 9-ந் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தினரின் பதிலடியால் சீன வீரர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். 

இதனால் சீன ராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்நிலையில் சீன ராணுவத்தினர் விட்டு சென்ற உபகரணங்களை இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர். அதில், ஒரு சில பைகளில் ஆடைகளும், சில பைகளில் கடுமையான குளிரில் வாழ்வதற்கு தேவையான பொருட்களும் இருந்தன.  

இதையடுத்து பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கிடையே பதற்றமான நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு பூடான் எல்லையில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் சுமார் 73 நாட்கள் வரை நீடித்தது. 

அந்த மோதலுக்கு காரணம் அந்த பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியது தான் என்று தகவல் வெளியானது. அதன் பின்னர் பூடானுக்கு சொந்தமான பகுதியில் சீன ராணுவம் கிராமங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவு தெரிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் வெளியாகி நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா தற்போது ஒரு பாலம் உள்பட புதிய கட்டுமான பணிகளை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பூடான் எல்லையில் சீனாவால் அமைக்கப்பட்டு வரும் இந்த கட்டுமான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக சைபுரு, கைடாங்ஷா மற்றும் குலே ஆகிய பகுதிகளிலும் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சீனாவின் இந்த கட்டுமான பணிகளை இந்தியா கவனித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chinese start construction work in poodan doklam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->