அமெரிக்க அதிபர் புஷ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்திருந்தவர் ஜார்ஜ் எச்.புஷ். அவருக்கு வயது 93 . அவர்  உடல்நலக்குறைவுக் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வயோதிகரான அவருக்கு ரத்தத்தில் பரவிய தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது அவரின் உடல்நிலையில் சிறிதளவு  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னேற்றம் ஏற்பட்டால் தகவல்களை பின்னர் அறிவிப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.புஷ் க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், உயிருக்கே அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Image result for george h bush with his father

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச். புஷ்யின் மனைவி பார்பரா புஷ் கடந்த வாரம் தான்  காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று திரும்பிய  புஷ் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவருடைய மகன் ஜார்ஜ் W.புஷ் அமெரிக்காவின் அதிபராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

i


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

american ex president admitted in hospital serious


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->