கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா கலிபோர்னியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தின் ஹம்போல்ட் கவுன்டி, யுரேகா அருகே 6.4 ரிக்டர் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடுகள் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் சில பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்தும், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தூக்கி எரியப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் மின்விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed in earthquake hits California America


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->