கலிபோர்னியாவை தாக்கிய புயலால் 19 பேர் பலி.! எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் குளிர் காலத்தினால் கடந்த இரு மாதங்களாக கலிபோர்னியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்புயல், சூறாவளி மற்றும் பலத்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியும், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாயந்துள்ளன.

மேலும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் 2.2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளன. இதுவரை புயல், மற்றும் பலத்த மழையால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவின் மிகப்பெரிய சுற்றுலா தளங்களான கார்மெல் மற்றும் பெப்பிள் பீச் அருகில் உள்ள சாலினாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அபாய அளவை தாண்டி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் உள்ள 24000 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மேலும் இரண்டு புயல்கள் கலிபோர்னியா மற்றும் பசுபிக் பகுதிகளை தாக்ககூடும் என வானிலை மையம் கணித்துள்ளதால் அப்பகுதிகளுக்கு நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 died in California flooding and cyclone


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->