பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 12 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு பெருவில் உள்ள ஜூலியாக்கா விமான நிலையத்திற்கு அருகே நேற்று அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த டிசம்பர் மாசம் ஆதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக, துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார்.

இந்நிலையில் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்க கோரியும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஜூலியாக்கா விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட போதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 killed in anti government protests in Peru


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->