கலிபோர்னியாவில் சீனப் புத்தாண்டு விழாவில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் பலி - Seithipunal
Seithipunal


கலிபோர்னியாவில் சீன புத்தாண்டு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டை கொண்டடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். அப்பொழுது நிகழ்ச்சியில், எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத நபர் மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றியபோதும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 died in shooting in new year celebration in California


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->