சபரிமலை | உடனடி தரிசன முன்பதிவு திடீர் ரத்து- தேவஸ்தானம்  பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


கேரளா, திருவனந்தபுரம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஸ்தான செயலாளர், செயல் அதிகாரி, உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார். அவர், சபரிமலையில் கடந்த மண்டல மகர விளக்கு சீசனில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை கருத்தில் கொண்டு இனி வரும் சீசன் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

உடனடி தரிசனம் முன்பதிவு முறை ரத்து செய்யப்படுகிறது. அதாவது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முன்பதிவு ஒரு செய்து கொள்ள முடியும். பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் கார் அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 

அந்த அறிக்கை வருகின்ற 23ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும் முதற்கட்டமாக அப்பம் அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைகளுக்காகவும் ரோப் கார் வசதி பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimala immediate darshan booking cancellation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->