தூத்துக்குடி முழுவதும் திடீரென குவிக்கப்பட்ட போலீசார்.! மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது எனவும், சில கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்'' என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகம் செய்து வருகிறது. 

ஆலை மீண்டும் திறப்பதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதன் பிறகு, ஸ்டெர்லைட் ஆலை செயல்பட பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை தொடங்கிய உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசும், வேதாந்த நிறுவனமும் தங்களின் வாதத்தை முன்வைத்துள்ளன. இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து, இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும்  எழுத்துப்பூர்வ வாதத்தை அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாகவும், இதனால்,தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி பரபரப்பை உண்டாக்கியது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள், ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தேர்தல் தொடர்பான முன் ஏற்பாடுகள் தானே தவிர மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை இறுதி தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THOOTHUKUDI DISTRICT COLLECTOR PRESS MEET


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->