உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம்: எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்று அழைக்கப்படுவது திருவாரூர் ஆழித்தேர். 96 அடி உயரத்தில், 67 அடி அகலத்தில் உள்ள இந்தத் தேரின் மொத்த எடை 350 டன் ஆகும். இதனை இழுப்பதற்கு ஒன்றரை டன் எடையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமுடைய வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. 

ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ள இந்தத் தேரை திருப்புவதற்கும், நிறுத்துவதற்கும் புளிய மரத்தாலான 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தேரின் முகப்பு பகுதியில் நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக நான்கு குதிரைகள் பாயும் நிலையிலும், அவற்றின் நடுவில் யாழி ஒன்றும் அமைக்கபபட்டுள்ளது.

இந்த தேரைப் பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பதற்கு ஏதுவாக பின்பக்கத்தில் புல்டோஸர் இயந்திரம் மூலம் தள்ளப்படும். இந்தத் தேரைப் பார்ப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். 

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆழித்தேர் திருவிழா பங்குனி உத்திரத்தன்று பத்திரிகை வாசித்து அதன் பின்னர் தேர் திருவிழாவுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இந்த நிலையில், இந்த வருடத்திற்கான தேர் திருவிழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

அதாவது, இந்த வருடம் ஆழித்தேர் திருவிழா வருகிற மார்ச் 21-ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்தில் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvarur chariat festival date announce


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->