பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடை.! உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் ஓரமாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.எஸ்.கேகர் தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் ஏராளமான உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

ஏற்கனவே உத்தரவிட்டதை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அரசே மதுக்கடைகளை நடத்தி வருவதால், எங்கள் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது” இவ்வாறு தீர்ப்பில் கூறியிருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3321 மதுக்கடைகளை நேற்று இரவுக்குள் மூட வேண்டிய நெருக்கடி தமிழக அரசுக்கு ஏற்பட்டது. ஆனாலும் மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை, சாலைகளின் பெயரை மாற்றியும், வாசலை மாற்றியும் மீண்டும் திறந்து தமிழக அரசு நடத்திக்கொண்டு தான் உள்ளது. 

இந்நிலையில், சேலத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி பெற்று செயல்படும் டாஸ்மாக் பார்கள் எத்தனை? வேண்டும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac case chennai hc new order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->