பசுமை வழிச்சாலை எதிர்ப்பு.! பள்ளி மாணவி பிளேடால் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி..!! பதற்றத்தில் தி.மலை..!!! - Seithipunal
Seithipunal


சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் 08 வழி பசுமை சாலைக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்த அளவீடு பணி 90 சதவீத பணிகளை காவல்துறையின் உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அதிகாரிகள் தங்கள் பணியை முடித்து விட்டனர்.

திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள மேப்பத்துறை மற்றும் சிறுகிளாம்பாடி கிராமத்தில் நிலம், வீடு பறிபோவதால் லட்சுமி என்ற மூதாட்டி, மற்றும் கிராமத்தை சேர்ந்த ஒருசில விவசாயிகள் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கு முயன்றனர். மேலும், தென்னகரத்தில் உள்ள விவசாய நிலங்களில் கறுப்பு கொடி ஏற்றி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்கொலை மிரட்டலை அடுத்து சிறுகிளாம்பாடி மற்றும் தென்னகரத்தில் நிலம் அளவீடும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

தேத்துறையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம், விளையாட்டு மைதானம் கையகப்படுத்தப்பட்டது. அந்த பள்ளியில் மாதாந்திர தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவர்களுக்கு நடுவில் கற்களை நட்டனர். இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே கிராமத்தில், விவசாயி பெருமாள் என்பவரின் மனைவி அஞ்சலை தனது நிலத்தை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் புரண்டு கத்தி கதறி அழுதார்.

இந்நிலையில், சற்று முன் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே எருமைவெட்டி எனும் கிராமத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுவந்தனர். அளந்து முடித்தபின் நிலத்தில் கல்லை நட்டனர். அப்போது, நட்ட கல்லை பிடிங்கிவிட்டு என் நிலத்தில் இருந்து கிளம்புங்கள் என்று, பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி அம்மு தற்கொலைக்கு முயன்றார். 

ஆனால் அதிகாரிகள் இதனை பொருட்படுத்தாமல், கல்லை எடுக்க மறுத்துவிட்டனர். மேலும், மாணவி கையில் இருந்த பிளேடை பறிக்க போலீஸார் முற்பட்டனர். அப்போது, மாணவி அம்மு, ''என் உயிர் மீது எனக்கு அக்கறை இல்லை, எனக்கு விவசாயம்தான் முக்கியம்'' என்று கூறிய படியே தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். 

உடனடியாக போலீசார் அவரை மீட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், கோவத்தையும் ஏற்படியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SCHOOL GIRL ATTEMPT SUICIDE AGAINST GREEN WAY ROAD


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->