காதலை பற்றி கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!! குவிந்த ஆதரவு!!   - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. 

இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. 

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகினற்னர். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 



 

அதில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை!" எனவும், 



 

"பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!" எனவும், தெரிவித்துள்ளார். 

ஆரம்ப காலம் முதலே சிறு வயது மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளை காதல் என்ற போர்வையில் வீழ்த்தி அவர்களது வாழ்க்கையை வீணாக்கும் கயவர்களை ராமதாஸ் கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசும் மிகுந்த கண்தனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramadoss says about love and pollachi issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->