செறிவூட்டப்பட்ட அரிசி... முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, 

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகம் செய்கிறீர்கள் என மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் இது குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அப்போது அரிசியை உண்ணக்கூடாதவர்கள் எப்படி கண்டறிவார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதுவும் ரேஷன் கடைகள் என்றால் ஏழை எளிய மக்கள் அதிகம் அரிசி வாங்குவது வழக்கம். 

அதனால் யார் இந்த அரிசியை பயன்படுத்தக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றத்திற்கு தே.மு.தி.க சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

தரம் பிரித்து இந்த அரிசியை யார் சாப்பிட வேண்டும் என்ற உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகு மக்களது பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டு வரவேண்டும். அதுவரை செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத்திற்கு தமிழக அரசு அனுமதி செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha Vijayakanth says fortified rice people clarified 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->