கச்சத்தீவு சர்ச்சை.. "போலி ஆவணங்கள் வெளியிட்டாரா அண்ணாமலை?".!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முதல் கட்ட மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்ற போது தமிழ்நாட்டிற்கும் வாக்குப்பதிவு நடந்ததால் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு பலமுறை வந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். 

மக்களவை பொது தேர்தலின் இப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கச்சத்தீவு விவகாரம் குறித்து தனக்கு கிடைத்த தரவுகளை வெளியிட்டு இருந்தார். 

அதோடு மட்டுமல்லாது கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டது கருணாநிதிக்கு தெரிந்தே நடந்தது என குற்றம் சாட்டு இருந்தார். மேலும் கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை மட்டுமே திமுக குறை சொல்லி வந்த நிலையில் உண்மையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரகை ஆக்கப்பட்டதில் திமுகவுக்கு முழு பங்கு உண்டு என அண்ணாமலை கூறியிருந்தார். இந்த விவகாரம் அரசியல் இந்த விவகாரம் மக்களவை இப்போது தேர்தல் களத்தில் எதிரொலித்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட ஆவணங்கள் போலியாக இருக்கும் திமுக தரப்பு சந்தேகம் எழுப்பி இருந்தது. 

இதற்கிடையே திமுக வின் சந்தேகத்தை இணைப்புக்கு வகையில் ஊடகவியலாளர் அரவிந்தகாஷன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "கடந்த மார்ச் 5ம் தேதி கச்சத்தீவு தொடர்பான ஆவணங்களை கேட்டு அண்ணாமலை விண்ணப்பம் செய்துள்ளார். அன்றைய தினமே விண்ணப்பத்திற்கு வெளியூர்வத் துறை அமைச்சகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் அதே துறையில் கீழ்நிலைச் செயலாளராக பணியாற்றும் அஜய் ஜெயின் என்பவருக்கு உரிய பதிலை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கிறார். 

அதன்படி அஜய் ஜெயின் என்பவர் மார்ச் 31ஆம் தேதி 17 பக்கங்கள் கொண்ட அண்ணாமலையின் விண்ணப்பத்தை முடித்து வைக்கிறார். ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் அஜய் ஜெய ஜெயின் என்ற அதிகாரியின் பெயரை இடம்பெறவில்லை. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. 

வெளியூர் துறை அமைச்சகம் அளித்த பதிலில் அஜய் ஜெயின் என்பவர் பெயர் அதில் இடம்பெறவில்லை. அவ்வாறு இருக்க வெளியூர் துறை அமைச்சகத்தில் பணியாற்றாத நபரின் பெயர் மோசடியாக ஆவணத்தை வெளியிட்டனர் என எடுத்துக் கொள்ளலாமா? மொத்தத்தில் இல்லாத ஒன்றை வைத்து பாஜக அரசியல் செய்ய முயன்றுள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK alleged annamalai released fake documents in katchatheevu issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->