ஏசி உறியும் ஆக்சிஜன் எங்கிருந்து வருகிறது..? மக்களின் அறியாமையை வியாபரமாக்கி கோடிகளில் புரள்கிறது ஏசி கம்பெனிகள்..!! - Seithipunal
Seithipunal


இவ்வுலகில் எத்தனை உயிர்கள் பெருகினாலும் வாழ இடம் தாராளமாக உள்ளது. ஆனால் வெறும் 10% மனிதர்கள் பண வசதி பெற்றுவிட்டால் ஆடம்பர வாழ்விற்காக இப்பூமி 50 வருடங்களில் சுரண்டபட்டு இயற்கை அழியும் என்று கூறுகிறார் ஒரு ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி

பணக்காரர்கள் தான் வாழும் ஆடம்பர வாழ்க்கையால் சுற்றுச்சூழலையும் அழிக்கிறார்கள் தன் சந்ததி அழிவையும் ஏற்படுத்தி மருத்துவமனையை நாடி உயிர் தப்பிக்க போராடுகிறார்கள்.

இவ்வுலகம் இயங்க ஆக்சிஜன் காரணம், 2+(O) ஆக்ஸிஜன் காற்றில் பறக்கும் ஹைட்ரோஜனோடு இணைந்து மழையை தருகின்றன.

இப்படி சுவாசிக்க பிராணவாயு ஆக்சிஜன், குடிக்க நீர் அனைத்தும் தந்து இவ்வுலகை பசுமையாக வைக்க உதவுவது மரங்கள்.

மனிதன் வளர்ச்சிக்காக பூமியில் ஒவ்வொரு வருடமும் 15 பில்லியன் மரங்களை வெட்டுவதாக அமெரிக்க புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதனால் உலக. வெப்ப உயர்வு, மழை குறைவு, பல்லுயிர் அழியும் சூழல் கடந்த 50வருடங்களில் ஏற்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக கடந்த 10 வருடத்தில் அதிக மின்சார பயன்பாடு சாதனத்துக்காக அதிக மின் தேவை எற்பட்டதால், பூமியில் சுற்றுச்சூழலை சீரழிக்கும் அனல்மின், அணுமின் நிலையங்கள், பெட்ரோல், நிலக்கரி சுரண்டல்களால் நாம் இன்னும் பூமியை சூடேற்றி வருகிறோம்.

இதற்கு காரணமான பணக்காரர்கள் வீடு ஏசி, கக்கூஸ் ஏசி, ஆபிஸ் ஏசி என தன்னை தற்காப்பதாக இது வெளியிடும் சூடை பற்றி கவலைபட்டது கிடையாது.

ஏசி குளிர் வைரஸ் பரப்பும்,தன் பிள்ளைகள் தீரா காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, பெரியவர்களுக்கு நீர்சத்து நோய் என தன்னையும் பூமியை அழித்துகொண்டு கார்பரேட் டாக்டர்களை வாழ வைக்கிறார்கள்.

இதில் வெளியே தெரியாமல் தலை காட்டிவிட்டால் உஷ்!!! என்ன சூடு" இயற்கை அழிவிற்கு தான்தான் காரணம் என தெரியாமல் காலநிலையை திட்டுவார்கள்.

இவர்கள் ஏசி உறியும் ஆக்சிஜன் எங்கிருந்து வருகிறது??? யாரோ முன்னோர்கள் நட்ட மரத்திலிருந்து குளிர் ஈரகாற்றை உறிந்து பாமரமக்களுக்கு சூடை மட்டுமே கொடுக்கிறார்கள்.

இதை பயன்படுத்திக்கொண்டு கோடி கணக்கில் வியாபரம் செய்கிறது ஏசி, பிரிட்ஜ் கம்பெனிகள்.

என்னதான் தீர்வு??

உலகமே அழிவை நோக்கி செல்லும்போது தமிழினம் மட்டும்தான் இயற்கைக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் போராட்ட குரல் கொடுக்கிறது.

மது, ஆபாசங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் நாம்தான். ஏனெனில் நாம் இயற்கை வழி மூத்த குடி மக்கள்.

இயற்கை சுரண்டி அழிக்கும் பணக்கார அறியாமை மக்களுக்கு மீம்கள் மூலமாக விழிப்புணர்வு கொடுப்போம்.

ஆறுகளுக்கும், மண்ணுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கும் கூல்டிரிங்குகளை தவிர்த்து, நம் முன்னோர்கள் கோடையில் எடுத்துக்கொண்ட நீர் ஆகாரங்களை பருகுவோம்.

சுயநலத்தோடு ஏசி வாங்குவற்கு பதிலாக தெருவெல்லாம் மரம் நடுங்கள், 10 வருசத்தில் அவை வளர்ந்து குளுமை நிலவும், மழை அதிகரிக்கும், மண் அரிப்பு தடுக்கபடும்,நிலத்தடி நீர் பெருகும்.

"உங்கள் தெருவில் மரம் இல்லையா? அப்ப நீங்கள்தான் அதற்கு பொறுப்பு"

பணத்தை பெற்றுக்கொண்டு சுயநலத்தால் பேராசையால் நமது சந்ததிகளின் சூழ்நிலையை அழிக்காமல், நாமே மாற்றத்தின் முதல் படியாக முன்வருவோம்.

Source: SOCIAL MEDIA


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

possible reasons behind AC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->