கல்லுாரி வாலிபரைக் கம்பியால் தாக்கிய போலீஸ்..! விஷயத்தை அப்படியே அமுக்கிட்டாங்க..!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், கீழப்பெருங்கரையைச் சேர்ந்தவர் அருண் (வயது 21). இவர் சிவகங்கையில் உள்ள, மன்னர் துரைச்சிங்கம் கலைக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் வழக்கமாக, கல்லுாரிக்கு, பரமக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக சிவகங்கை வந்து கல்லுாரிக்குச் சென்று வருகிறார்.

நேற்று முன் தினம், காலை மானாமதுரையில் இருந்து தனியார் பேருந்தில், சிவகங்கைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால், அருண், படிக்கட்டில் நி்ன்றபடி பயணம் செய்தார்.

உருளி என்ற கிராமத்தை அந்த பஸ் கடக்கும் போது, சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை எட்டி வேடிக்கை பார்த்துள்ளார் அருண்.

அப்போது, சாலையில் நின்றிருந்த, மானாமதுரை சிப்காட் போலீசார், தன் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால், படியில் நின்றிருந்தவர்களை நோக்கி வேகமாக அடித்தார்.

அந்தக் கம்பி, அருணின் கையில் பலமாக பட்டது. அவர் வலியால் துடித்தார். உடன் பஸ் நிறுத்தப் பட்டது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த, மருத்துவத்துறை பெண் ஊழியர்கள், அருணுக்கு, முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பின், அவரை, சிவகங்கையில் உள்ள, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது, அருணுக்கு கையில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

அப்போது, அங்கு வந்த சில போலிசார், மருத்துவர்களிடம் ரகசியமாக ஏதோ பேசினர். இதனை அடுத்து, அருணுக்கு, குளுக்கோஸ் டிரிப் ஏற்றி விட்டு, அனுப்பி வைத்தனர்.

இரும்புக் கம்பியால் தாக்கிய போலீசார் மீது, அருண் புகார் அளித்து விடக் கூடாது, என்பதற்காக, போலீசார், மருத்துவர்களிடம் சொல்லி, அருண், பஸ்ஸிலிருந்து தவறி விழுந்ததாக, அறிக்கை தரும்படி, கேட்டுக் கொண்டார்களாம்.

மருத்துவர்களும், அதற்கு தலை ஆட்டி விட்டனர். இது மாதிரி இன்னும் எத்தனை கேசோ….?
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

POLICE ATTACK COLLEGE STUDENT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->