வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! பெட்ரோல் பங்க் ஸ்ட்ரைக்! நேரம் குறித்த உரிமையாளர்கள்! - Seithipunal
Seithipunal


கேரள மாநில அரசின் கட்டுப்பாடுகளை திரும்பப்பெற கோரி, அம்மாநிலத்தில் இயங்கும் பெட்ரோல் பங்க்-கள் இன்று இரவு முதல் நாளை காலை வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என பெட்ரோல் பம்புகளுக்கு கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், இதனை செயல்படுத்தினால் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் எரிபொருள் கேட்டு வருபவர்களுக்கும், பெட்ரோல் பங்க் நிறுவனத்தினருக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த வாக்குவாதத்தில் பங்க் ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும், இதற்கு அரசு தீர்வு காண பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்த நிலையில், கேரள மாநில அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (31.12.2023) இரவு 8 மணி முதல் நாளை (1.1.2024) காலை 6 மணி வரை கேரளாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளும் செயல்படாது என அறிவித்து, போராட்டத்தில் இறங்கியுள்ளது பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு.

மேலும், ரவுடிகளால், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தாக்கப்படும் அவலத்திற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகும் கேரளா மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மார்ச் மாதம் 10-ந்தேதி முதல், இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பம்புகள் செயல்படும் என்ற முடிவுக்கு வருவோம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, கிழக்கு கோட்டை, விகாஸ்பவன், கிளமானூர், சடையமங்கலம், பொன்குன்னம், சேர்த்தலா, மாவேலிக்கரா, மூணாறு, மூவாட்டுபுழா, பரவூர், சாலக்குடி, திருச்சூர், குரு வாயூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் செயல்படும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 14 யாத்ரா எரிபொருள் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol ratio strike protest in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->