Yellow Alert : மே8-ல் மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!! வானிலை மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் கோடை வெயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்து வருவதால் வெயில் தாக்கம் அதிகம் உள்ள வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

இந்த மழையானது வரும் மே 7ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மே 8ம் தேதி வாக்கில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி வரும் மே 8 ஆம தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நிலவி வரும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain yellow alert on may8 in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->