இந்த கூட்டணிக்கு இது தான் காரணம்!! மேடையிலேயே மனம் திறந்த ஓபிஎஸ்!!  - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில், தமிழகத்தை பொருத்தவரை அதிமுக தலைமையில் மெகா கூட்டணி ஒன்று அமைந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று சென்னை வண்டலூரில் மாபெரும் தேசிய மாநாடு மோடி தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு நலத்திட்டங்களை மோடி அறிவித்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். 

மேலும், "தமிழகதிற்கு வந்து செல்லும் விமானங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்கள் அனைத்திலும் தமிழ்மொழியில் அறிவிப்பு வெளியிடப்படும்" என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

மேலும், தமிழர்களின் பெருமைகளை கூறி மகிழ்ந்ததோடு, தமிழக மக்கள் மிகவும் நல்ல மனம் கொண்டவர் என புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும், சேலம்-கரூர்-திண்டுக்கல் மற்றும் ஈரோடு-கரூர்-திருச்சி மின்மயமாக்கல் ரயில் பாதை, தெற்கு ரெயில்வே சார்பில் ரூ.321.64 கோடி செலவில் செயல்படுத்தப்படும் 2 திட்டங்கள், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திரவ எரிவாயு முனையம் உள்பட 5 புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். 

இதில் கலந்துகொண்ட துணைமுதல்வர் ஓபிஎஸ், "அதிமுக வெற்றி கூட்டணியை அமைத்தது தீயசக்திகளை அழிப்பதற்காக தான். சென்னையில் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என கூறிய ஸ்டாலினிற்கு அதை கொல்கத்தாவில் கூற தைரியமில்லை. 

யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட அறிவிக்க தைரியம் இல்லாத ஸ்டாலின், அதிமுக கூட்டணியை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நாடே சொல்கிறது" என பேசியுள்ளார்.  #Kilambakkam #ADMKAlliance #Election2019 #PMModi #OPanneerselvam


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops speech about admk Pmk Bjp coalition at vandalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->