அரசு அதிகாரிகள், தமிழக மக்களுக்கு முன்னுதாரணமாகிய நெல்லை மாவட்ட ஆட்சியர்.! தன் மகளை அரசு அங்கன்வாடியில் சேர்த்து பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக மக்களை பொறுத்தவரை அரசு பள்ளியில் தங்களது பிள்ளைங்களை படிக்க வைப்பது என்பதை தங்களுக்கு கவுரவ குறைச்சலாக என்னும் பரிதாப நிலை உருவாகியுள்ளது.

அதே சமயத்தில் கல்லூரி மேல் படிப்பு, அரசாங்க பணிகள் உள்ளிட்டவைகளில் தங்களின் பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் அதனை பெருமையாகவும், கவுரவமாகவும் என்ன தொடங்கியுள்ளனர். 

அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது, சமூக வலைத்தளங்களில் நீண்டகாலமாக வைக்கப்படும் குச்சட்டக உள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள், அவரின் பிள்ளையை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து படிக்க வைத்து உள்ளார். இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக ஷில்பா அவர்கள், 2018 ஆண்டு மே மாதம் 25 ம் தேதி பொறுப்பேற்றார். ஆண்டு முதல் தனது அதிரடி நடவடிக்கைகளால் பல நல்ல மாற்றங்களை அம்மாவட்டத்தில் கொண்டுவந்துள்ளார்.

பொதுவாகவே அவர் அரசு பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொள்வதை வழக்கமாக கொண்ட நெல்லை மாவட்ட ஆட்சியர், தனது பெண்குழந்தை கீதாவை நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து  படிக்க வைத்து வரும் இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NELLAI DISTRICT COLLECTOR SOME DO SPECIAL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->